நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், அறிவு திருக்கோவிலில் உலக அமைதி தினவிழா மற்றும் அறங்காவலர் தின விழா நடந்தது.
திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன் வரவேற்றார். உலக அமைதி வேண்டி சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. புதியதாக இணைந்த அறங்காவலர்களுக்கு திருக்குறள் பேரவை தலைவர் சீனுவாசன் சால்வை அணிவித்து பாராட்டினார். விழாவில் மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் குமார், மணி, வைஷ்ணவிதேவி, பரிமளாதேவி, தாட்சாயிணி, கருணாகரன், வாசுதேவன், சாந்தகுமாரி, சரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.