ADDED : ஆக 20, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உலக புகைப்பட தினத்தையொட்டி, திருமுதுகுன்றம் போட்டோ, வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது.
விருத்தாசலம் ஸ்ரீரிஷப் ஜெயின் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்ந்த் தலைமை தாங்கினார்.
சங்கத் தலைவர் பூபதி, செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். துணைத் தலைவர் ரவிகிருஷ்ணா, துணை செயலாளர் சுரேஷ், மூத்த உறுப்பினர்கள் அமல்ஜோசப், கல்யாண முருகன், சேகர், அண்ணாதுரை, தேவி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலம் நடந்தது.