ADDED : டிச 08, 2025 06:00 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த வேளாண் கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண் தின கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, கருத்தங்கை துவக்கி வைத்தார். மேலும், மண்வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
வேளாண் உதவி இயக்குனர்கள் வெங்கடேசன், முகமது நிஜாம் ஆகியோர் மண்வள மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பேசி, மண்வள அட்டை வழங்கினர்.
இதில், பல்வேறு உர நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் தொழில்நுட்ப கையேடு, உரங்களை காட்சி படுத்தி இருந்தனர்.
வேளாண் விஞ்ஞானிகள் கண்ணன், சுகுமாறன், ஜெயக்குமார், காயத்ரி, கலைச்செல்வி, ஆகியோர் விவசாயிகளுக்கு தொழில்நுட்பட பயிற்சி அளித்தனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியல் தென்னை மற்றும் முந்திரியில் எரு இடுதல் செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
இதில், உர நிறுவன மேலாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

