ADDED : ஜன 17, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: உலக திருக்குறள் பேரவை சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் ஜானகி ராஜா வரவேற்றார். கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவி, வழக்கறிஞர் திருமார்பன், தமிழ் சங்க நிர்வாகி ராமஜெகதீசன், சிவக்குமார், கவிஞர் சிங்காரம் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், திருக்குறளை தேசிய நுாலாக அங்கீகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முனுசாமி நன்றி கூறினார்.