/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம்
/
உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம்
ADDED : மார் 30, 2025 04:45 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி ஊராட்சி, சின்னவடவாடி கிராமத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்து கொண்டு பேசுகையில், 'கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், இடைநிற்றலை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும், அரசு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் 72 மாதம் வரை உள்ள குழந்தைளின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி பொதுநிதி செலவினம், சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்வது, நுாறுநாள் வேலை திட்டம், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் விவாதிக்கப்பட்டன.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஊராட்சி உதவி இயக்குனர் முருகன், தாசில்தார் உதயகுமார், பி.டி.ஓ., க்கள் சங்கர், ஜெயக்குமாரி, வேளாண் உதவி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி செயல் அலுவலர் மதியழகன் பங்கேற்றனர்.