ADDED : ஆக 04, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அடுத்த மேலமூங்கிலடியில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவிலில் 13ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று முன்தினம் உற்சவர் கருப்பசாமி, தாய் வீடான பண்ருட்டியில் இருந்து புறப்பட்டு மேலமூங்கிலடி கிராமத்திற்கு வருகை தரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும் மூலவர் சன்னதியின் கதவு திறப்பும், மாலை கத்தி மேல் நின்று கருப்புசாமி அருள்வாக்கு கூறுதல் மற்றும் மிளகாய் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, கிடா பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.