ADDED : பிப் 16, 2026 07:15 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் அவதார தின விழா வரும் 24ம் தேதி நடக்கிறது.
மகான் ராகவேந்திரா அவதார இல்லம் புவனகிரியில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
தற்போது 431ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி காலை 5:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் ஸ்தோத்திர பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சி துவங்குகிறது.
காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகமும், காலை 9:30 மணிக்கு பால் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகமும் நடக்கிறது.
பகல் 12:45 மணிக்கு மகா தீபாராதனையும், அன்னதானமும், இரவு 8.00 மணிக்கு ஸ்வஸ்தி பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
