/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் நுாலகர் தின விழா
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் நுாலகர் தின விழா
ADDED : ஆக 18, 2025 12:37 AM

கடலுார்; கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், தேசிய நுாலகர் தின விழா நடந்தது.
கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். பேராசிரியர் மணிகண்டன் வரவேற்றார். பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மனோகரன் புத்தகங்களை படிப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். 2024-25ம் கல்வியாண்டில் அதிக நாட்கள் நுாலகத்தைப் பயன்படுத்திய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
எம்.சி.ஏ.,முதலாமாண்டு மாணவர்கள், அனைத்துத்துறை சார்ந்த இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நுாலகத்துறை தலைவர் சரவணன் மற்றும் நுாலகர்கள் செய்திருந்தனர். உதவி பேராசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.