/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருப்பு அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன்
/
இருப்பு அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன்
ADDED : ஆக 14, 2025 12:53 AM

விருத்தாசலம் ': விருத்தாசலத்தில் நடந்த குறுவட்ட அளவிலான தடகள போட்டியில், இருப்பு பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று சாதனை படைத்தனர்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் குறுவட்டத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தடகளம், வாலிபால், கால்பந்து, குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அதில், 100, 200 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், பெண்கள் பிரிவில் பங்கேற்ற இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் மனோகரன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். உடற்கல்வி இயக்குனர் விசாலாட்சி, உடற்கல்வி ஆசிரியர் குணசுந்தரி உடனிருந்தனர்.