நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழாவையொட்டி யோகாசனங்கள் குறித்த சிறப்பு பயிற்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா, ஆசிரியர் சீனிவாசன் பேசினர். மாணவர்களுக்கு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மகேஸ்வரி நன்றி கூறினார்.