ADDED : ஜூன் 21, 2026 12:54 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் பள்ளிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
சிதம்பரம், வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த யோகா தின விழாவில், சேர்மன் குமார் தலைமை தாங்கி யோகா பயிற்சி குறித்து பேசினார்.
பள்ளி முதல்வர் ராதிகா முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெயஷீலா மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
சிதம்பரம், முஸ்தபா பள்ளியில் நடந்த யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
ஆசிரியர்கள் பவானி, ஜெயச்சத்ரா முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ஞானவேல், யோகாவின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் அருண், சக்தி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
