sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

/

அரசு மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 31, 2025 02:25 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:

கடலுார் மாவட்டத்திற்கு 2025--26ம் ஆண்டு செயல்திட்டத்தின்படி, கடலுார் அரசு தலைமை மருத்துவமனை (உள்வளாகம்) சிறுதானிய உணவு உணவகம் அமைத்திட அனுமதி வரப்பெற்றுள்ளது. இந்த சிறுதானிய உணவகத்தினை மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது உற்பத்தியாளர் குழுக்களின் கூட்டமைப்புகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அல்லது உற்பத்தியாளர் குழுக்களின் கூட்டமைப்புகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு 5 முதல் 8 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

உணவு தயாரித்து விற்பனை செய்வதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏ அல்லது பி தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் சமுதாய சார்ந்த அமைப்புகள் விண்ணப்பிக்கும் போது, ஊரக வாழ்வாதார இயக்கம், லோகாஸ், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய இணையதளத்தில் உள்ள விவரத்தினை அவசியம் தெரிவிக்க வேண்டும்.

எனவே தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்படி விண்ணப்பங்கள் வரும் 10.11.2025 தேதி மாலை 5.00 மணிக்குள் பூமாலை வணிக வளாகத்தின் மாடியில் அமைந்துள்ள அலுவலகம் எதிரில், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் கடலுார் அலுவலகத்திற்கு நேரில் அல்லது பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us