ADDED : செப் 16, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு புதுமனைத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் மலர்விழி, 18; பி.எஸ்சி., நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தவர்.
கடந்த 14ம் தேதி, திருவந்திபுரத்தில் நடக்கும் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாலமுரு கன் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மலர்விழியை தேடி வருகின்றனர்.
