/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் இருந்து விழுந்த இளம் பெண் சாவு
/
பைக்கில் இருந்து விழுந்த இளம் பெண் சாவு
ADDED : நவ 01, 2025 02:28 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த இளம் பெண் இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 45; நாட்டார்மங்கலம் சிவா மனைவி ஆனந்தி, 35; இருவரும் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் உள்ள பாத்திர கடையில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஆனந்தி சேத்தியாதோப்பு அருகே உள்ள கோவிலுக்கு சென்றவர் பஸ்சுக்காக காத்திருந்தார். சத்தியமூர்த்தி தனது பைக்கில் வடலுாரில் இருந்து வந்தார். அப்போது ஆனந்தியை தனது பைக்கில் லிப்ட் கொடுத்து ஊருக்கு அழைத்து வந்தார்.
வீராணம் ஏரிக்கரை திருச்சின்னபுரம் அருகே, எதிரில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். அதில் ஆனந்தி பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டது மயங்கினார்.
உடன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இருந்தார்.
புகாரின் பேரில் புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

