/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாய், மகனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
/
தாய், மகனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2025 02:29 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது அண்ணன் அருள்மணிமுத்து, 30; டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
அருள்மணிமுத்து கடந்த ஆண்டு கடலுார் அடுத்த கே.என்.பேட்டையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சாலை விபத்தில் அருள்மணிமுத்து காயமடைந்ததால் தவணை தொகையை கட்ட முடியவில்லை.
கடந்த மாதம் 24ம் தேதி நிதிநிறுவன ஊழியர்கள் ஜெகன்நாதன், சுந்தர், வெங்கடேசன், ராமமூர்த்தி, தனஞ்செயன் ஆகிய 5 பேரும் அருள்மணிமுத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணத்தை கேட்டு தாக்கினர். தடுத்த அருள்மணிமுத்துவின் தாய் தேவகியையும் தாக்கினர்.
வெற்றிச்செல்வன் அளித்த புகாரின் பேரில், ஜெகன்நாதன், சுந்தர், உட்பட 5 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

