ADDED : மே 20, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின் றனர்.
பண்ருட்டி தாலுகா, வானமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் மனைவி ஜெயபிரியா, 21; திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். கடந்த எட்டு மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயபிரியா, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 17ம் தேதி, கீழ்குமாரமங்கலத்தில் உள்ள தனது கணவரின் மாமா வீட்டிற்கு சென்றார். அங்கு மருந்து சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.