/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது
/
தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது
ADDED : அக் 28, 2025 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர் மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 55; பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழிலாளி. இவர், கடந்த 25ம் தேதி வண்டிப்பாளையம் அப்பர் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, 2 மர்ம நபர்கள் வழிமறித்து 2,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து வண்டிப்பாளையம் இளங்கோ மகன் தாமோதரன்,19; என்பவரை கைது செய்து, ஏ.வடுகப்பாளையம் ரவிச்சந்திரன் மகன் மனோதீபனை தேடி வருகின்றனர்.

