ADDED : டிச 09, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், 39; இவர் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி கடைவீதியில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து, 1 கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.