ADDED : ஆக 11, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திருக்கண்டேஸ்வரத்தில் சந்தேகப்படும் படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த சுந்தர் மகன் ரஞ்சித்,21; என்பதும், தற்போது சென்னையில் வசிப்பதும் தெரிந்தது.
சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திருக்கண்டேஸ்வரத்தில் விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

