ADDED : ஜூன் 18, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் புல்லட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 34; இவர் நேற்று காலை புல்லட்டை, பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சில மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, புல்லட் காணவில்லை.
இதுகுறித்து அவர் விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், மணவாளநல்லுார் புறவழிச்சாலை வழியாக வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
அதில், கார்குடல் பழனி மகன் மணிகண்டன், 23, என்பதும், புல்லட் திருடிதையும் ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.