ADDED : பிப் 28, 2026 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டிபண்ருட்டி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி,45;இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்கொடி,50; நேற்று அதிகாலை இவர்களின் வீட்டின் வெளியில் கட்டி வைத்திருந்த ஆடுகள் சத்தம் போட்டன.
இதனால் சந்தேகமடைந்த முத்துலட்சுமி,ஜெயக்கொடி இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் இவர்களின் 5 ஆடுகளை திருடி காரில் ஏற்றிக்கொண்டு தலைமறைவாகினர்.
முத்துலட்சுமி,ஜெயக்கொடி புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து பண்ருட்டி சிவராம் நகரை சேர்ந்த விஷ்ணுபிரசாத்,18; கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

