/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியிடம் அத்துமீறல் வாலிபர் போக்சோவில் கைது
/
மாணவியிடம் அத்துமீறல் வாலிபர் போக்சோவில் கைது
ADDED : நவ 02, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: 14 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் சக்திவேல் மகன் முரளி, 21. இவர், தாத்தா வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி அத்துமீறி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டார். இதனை அவரது தாத்தா பார்த்துவிட்டு, முரளியை பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, முரளியை நேற்று கைது செய்தனர்.

