/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியை தாக்கிய வாலிபர் 'போக்சோ' வில் அதிரடி கைது
/
மாணவியை தாக்கிய வாலிபர் 'போக்சோ' வில் அதிரடி கைது
ADDED : ஜூலை 06, 2025 03:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ் 2 மாணவி. இவர், நேற்று முன்தினம் காலை சக மாணவிகளுடன், விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பஸசிற்காக காத்திருந்தார். அங்கு வந்த கோபாலபுரம் அசோக்குமார் மகன் அருள்குமார், 21, என்பவர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார்.
பஸ்சில் ஏற முயன்ற மாணவியின் கையை பிடித்து இழுத்த அருள்குமார், தன்னை காதலிக்க மறுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்கியதில், கையில் அணிந்திருந்த காப்பு நெற்றியில் கிழித்து மாணவிக்கு காயம் ஏற்பட்டது.
சுதாரித்த அருள்குமார், நண்ருடன் பைக்கில் தப்பினார். காயமடைந்த மாணவி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், 'போக்சோ' உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அருள்குமாரை தேடி வந்தனர். கோபாலபுரம் மணிமுக்தாற்றங்கரையில் பதுங்கியிருந்த அருள்குமாரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.