நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அடுத்த இளநாங்கூர், காமராஜ் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; இவர், சி.முட்லுார் ஏ.மண்டபம் பகுதியில் மகேந்திரன் என்பவரிடம் வாடகைக்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த கடை உரிமையாளரின் சகோதரர்கள் கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்தி, 33; பிரேம்குமார், 28; ஆகியோர் கடையை காலி செய்யாவிட்டால் கொளுத்தி விடுவேன் என மிரட்டி, கண்ணாடி பாட்டிலை உடைத்தனர்.
இதனை தடுக்க வந்த வெங்கடேஷை, கத்தியால் குத்தினர்.
புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, பிரேம்குமாரை கைது செய்து, கார்த்தியை, தேடி வருகின்றனர்.

