UPDATED : நவ 10, 2026 04:57 PM
ADDED : நவ 10, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
கடலுார்: சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து நெட்டி தள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் புதுநகர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வடிவேல்,48; இவர், வன்னியர்பாளையம் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சீனிவாசன்,26; தினேஷ், சக்திவேல் ஆகியோர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.
இவர்களை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வடிவேல் கலைந்து போகுமாறு கூறியதற்கு அவரை, மூன்று பேரும் பணி செய்ய விடாமல் தடுத்து நெட்டி தள்ளினர்.
புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்து, தினேஷ், சக்திவேலை தேடி வருகின்றனர்.
