/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் விலைக்கு மது விற்பதை கண்டித்து வடலுாரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

ADDED : ஏப் 15, 2025 07:34 AM
வடலூர் : வடலுாரில், மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் ஒருவர் புகார் ஒன்றை அளிக்க சென்றார். போலீசார் அவரிடம் புகாரை பெற்ற போது, அதில் மதுபாட்டில், 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகாரில் தெரிவித்திருந்தார்.
அவர், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, அசோக்குமார், 37, என்றும், எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என தெரிவித்துள்ளார். அவரது புகாரை வாங்க மறுத்த வடலூர் போலீசார், திருப்பி அனுப்ப முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, தான் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பினர்.
போலீஸ் ஸ்டேஷன் முன்பு நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.