sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : நவ 10, 2024 04:18 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமம் செய்திக்குறிப்பு:

தமிழக மீனவர் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்தியகடற்படையில் நாவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும்சேர இலவச சிறப்பு பயிற்சிகள் தமிழக அரசால் ஆண்டுதோறும் தமிழககடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்படுகிறது.

அதன்படி 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் துவங்கி 3 மாதம் நடைபெற உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க தகுதியுள்ள மீனவர்வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை சம்மபந்தப்பட்டகடற்காவல் நிலையங்கள், மாவட்ட மீன் வளத்துறை அலுவலகங்கள், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அலுவலகம், வெள்ளி கடற்கரை சாலை, கடலுார் ஆகிய இடங்களில் இலவசமாகபெற்றுக் கொள்ளலாம்.

இந்த பயிற்சி கடலுார், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகியஇடங்களில் வழங்கப்பட உள்ளது.

அனைத்துகடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்குஅனுப்பப்படுவர். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவமாகவழங்கப்படும்

மூன்று மாதங்களுக்கும் மாதம் தலா 1000 ரூபாய் வீதம், ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

எனவே பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற, உரிய உடற்கூறு தகுதிகள் உடைய மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us