ADDED : ஆக 07, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் தண்டவாளத்தி ல் நேற்று முன்தினம் இரவு 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடந்தது. தகவலறிந்து சென்ற ரயில்வே இருப்புபாதை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த ராமு ம கன் அன்பரசன், 24; என்பதும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.