/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., அரசை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., அரசை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 05, 2025 03:16 AM

கடலுார்:கடலுாரில் மத்திய மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய மாவட்டத் தலைவர் அருள்பிரகாஷ், தெற்கு மாவட்டத் தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினர்.
மாநில துணைத் தலைவர் அரவிந்த் மணிரத்தினம், மாநில பொதுச் ்செயலாளர்கள் ஹரிஷ், பர்ஷா பர்வீன், கலைச்செல்வன், கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் காங்., மாநிலத் தலைவர் சூரிய பிரகாஷ், காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், இளைஞர் காங்., செயலாளர் சாகரீக ராவ் கண்டன உரையாற்றினர்.
முன்னாள் இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கலையரசன், கவுதம், மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்ஜித், பிரவீன், பொதுச் செயலாளர் விக்கி, கடலுார் தொகுதி தலைவர் தர்மதுரை, குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் அசோக் குமார், விக்னேஷ்வரன், கல்பனா, ஜெயசீலன், விஸ்வலிங்கம், விஜயராஜ், பிரவீன், தினேஷ், ஜெயராஜ் சசி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ., அரசின் வாக்கு திருட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.