/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
/
வீராணம் ஏரி தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
வீராணம் ஏரி தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
வீராணம் ஏரி தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : நவ 18, 2025 06:42 AM
காட்டுமன்னார்கோவில்: கூளாப்பாடியில் வீராணம் ஏரி தடுப்பு கட்டையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் லியாகத் அலி மகன் முகமது ஹாரிஸ்,19; அதே பகுதி இன்ப துள்ளா மகன் கமால் பாட்ஷா,19; இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் சேத்தியாதோப்பிற்கு சமையல் வேலைக்கு சென்றனர்.
பைக்கை கமால் பாட்ஷா ஒட்டிச் சென்றார். வீராணம் ஏரிக்கரை ரோட்டில் கூலாபாடி அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து ஏரி கரையின் தடுப்புக்கட்டையில் மோதியது.
இதில் பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பைக் பின் இருக்கையில் அமர்ந்திருந்த முகமது ஹாரிசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் மீட்பு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஹாரிஸ் உயிரிழந்தார். கமல்பாஷா சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

