/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
/
மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
ADDED : டிச 30, 2024 05:48 AM
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஓடாக்கநல்லுாரில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியவர், மின்சாரம் பாய்ந்ததில், தவறி விழுந்து உயிரிழந்தார்.
புவனகிரி அருகே உள்ள தெற்குதிட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ஆனந்தராஜ், 27; திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று ஓடாக்கநல்லுாரில் மாமனார் வீட்டிற்கு வந்த ஆனந்தராஜ், தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும்போது தென்னை மட்டை காற்றில் அசைந்தாடி அருகே சென்ற மின்கம்பியல் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் தவறி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.