/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் கம்பெனியில் விபத்தில் வாலிபர் பலி
/
தனியார் கம்பெனியில் விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஜன 17, 2025 12:40 AM

கடலுார்:கடலுார் மாவட்டம், கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சிவா, 22, தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர்.
நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு பாய்லர் இருக்கும் இடத்தில் வேலை செய்தபோது, எதிர்பாராதவிதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடன் பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
உறவினர்கள், கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கடலுார் முதுநகர் போலீஸ் நிலையம் முன் திரண்டு, இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.
கடலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பலராமன் தலைமையில் தனியார் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் பேச்சு நடத்தினர்.
இழப்பீடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டதால் தீர்வு ஏற்பட்டது. கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.