ADDED : ஜன 04, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடி அருகே நடந்து சென்ற வாலிபர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 32. மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் கோழியூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேல்முருகன் மீது மோதியதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.

