ADDED : மே 19, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த மருதத்துாரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் நிரேஷ், 22. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி அபிநயா, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று பகல் 2:00 மணியளவில், நிரேஷ் பழுதான டேபிள் பேனை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடன் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அபிநயா கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.