ADDED : ஜூலை 09, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: கோழியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி நகராட்சி, கோழியூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு விளையாட்டு மைதானம் வசதி இல்லை.
இதனால் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விளையாட முடியாமல் அருகிலுள்ள குளத்தில் வாலிபால், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, இப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை.
எனவே, இளைஞர்கள், மாணவர்கள் நலன்கருதி கோழியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
