நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே, ரயில் முன் பாய்ந்து வாலிபர் இறந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.
சிதம்பரம் அடுத்த வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன்சந்தோஷ்குமார்,22;இவர் நேற்று முன்தினம் இரவு கிள்ளை - பரங்கிப்பேட்டை ரயில் பாதையில், கடலுார் நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்தார். அதனை கவனித்த லோகோ பைலட், ரயிலை நிறுத்த முயன்றார். இருப்பினும், ரயில் அவர் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த ராஜாவை, அதே ரயிலில் ஏற்றிச் சென்று, புதுச்சத்திரம் ரயில் நிலையத்தில் இறக்கி, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து சிதம்பரம் ரயில் வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.