நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் வீட்டிற்கு தாமதமாக வந்த வாலிபர் தாய் திட்டியதால், புடவையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் அரவிந்தன்,21. சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். பொங்கல்விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர், இரவில் சாப்பிட தாமதமாக வந்ததால் தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன், நேற்றுமுன்தினம் இரவு 9.30மணிக்கு புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.