நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : குடும்ப தகராறில் விஷம் குடித்து வாலிபர் இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் அருள்மொழி, 27; இவருக்கும், மனைவி சரண்யாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சரண்யாவின் சகோதரர் சதீஷ், அருள்மொழியை தாக்கினார்.
இதில் மன உளைச்சல் ஏற்பட்ட அருள்மொழி கடந்த, 6ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.