நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் விக்னேஸ்வரன், 25. திருமணம் ஆகவில்லை.
கடந்த 6ம் தேதி அங்குள்ள காத்தாயி என்பவரது வயலில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு, திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன் இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் சங்கீதா கொடுத்துள்ள புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.