/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் மறியல் போராட்டம் வி.சி.,யினர் 13 பேர் கைது
/
ரயில் மறியல் போராட்டம் வி.சி.,யினர் 13 பேர் கைது
ADDED : அக் 09, 2025 11:35 PM
பெண்ணாடம்: வி.சி., தலைவரின் காரை மறித்து பிரச்னை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் வி.சி.., தலைவர் திருமாவளவன் காரில் சென்றார். அப்போது ஸ்கூட்டியில் சென்றவர் காரை மறித்து பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.
பிரச்னை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வி.சி., முன்னாள் மாவட்ட செயலாளர் தயா தமிழன்பன் தலைமையில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில், நேற்று காலை 9:30 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நிர்வாகிகள் மறியல் செய்தனர்.
பெண்ணாடம் போலீசார், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர்.