நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மினி வேன் வாங்கி தராததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புஷ்பம் பெஞ்சமின் மகன் கிளமண்ட் அகஸ்டின், 23; தனது தந்தையிடம் மினி வேன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கிளமண்ட் அகஸ்டின், வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட குடும்பத்தினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் இறந்தார்.
புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.

