நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினத்தில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் தாழங்குடா, சுனாமி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் கணேஷ்,28; திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணேஷிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தக ராறில் ஈடுபடுவது வழக்கம்.
நேற்றுமுன்தினம் இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததால், அவரது மனைவி பிரித்தி, கோபித்துக்கொண்டு அதே பகுதியிலுள்ள அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, கணேஷ் துாக்குப்போட்டு இறந்தநிலையில் இருந்தார்.
புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

