/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது
/
ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது
ADDED : ஜன 08, 2026 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட, 3 பேரை கைது செய்த போலீசார், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் மணல் திருடி வந்த டி.புதுார் கிராமத்தைச் சேர்ந்த லட்சகுரு,48; ஹரிஹரன்,23; ஜெயமுருகன்,46; ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

