/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இளைஞர்களின் ஓட்டுகள் கட்சிகளின் அரசியல் 'விளையாட்டு'
/
இளைஞர்களின் ஓட்டுகள் கட்சிகளின் அரசியல் 'விளையாட்டு'
இளைஞர்களின் ஓட்டுகள் கட்சிகளின் அரசியல் 'விளையாட்டு'
இளைஞர்களின் ஓட்டுகள் கட்சிகளின் அரசியல் 'விளையாட்டு'
ADDED : டிச 10, 2025 08:43 AM
மா வட்டத்தில் இளைஞர் பட்டாளத்தை குறிவைத்து அரசியல், கட்சிகள் விளையாட்டு உபகரணங்களை வாரி வழங்கி வருகின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் இளைஞர்கள், ஓட்டுகளை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக, அரசியல் கட்சிகள் உற்று பார்க்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன.
தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட் அணிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை, வாரி வழங்குகின்றனர்.
கட்சி தலைவர்கள் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக பரிசுகள் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், சட்டசபை தேர்தலில் தங்களது கட்சிக்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

