/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.8.88 லட்சம் மோசடி செய்த வாலிபருக்கு 'காப்பு'
/
ரூ.8.88 லட்சம் மோசடி செய்த வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜன 01, 2026 06:20 AM

காட்டுமன்னார்கோவில்: வேலை வாங்கி தருவதாக கூறி மூவரிடம், 8.88 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றிதாஸ், 56. இவருக்கு, 2023ம் ஆண்டு, உளுந்துார்பேட்டை அடுத்த குச்சிப்பாளையத்தை சேர்ந்த திருமலை, 32, என்பவர் அறிமுகமானார்.
அவர், ஹென்றிதாசின் மகனுக்கு சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை உண்மை என நம்பிய ஹென்றி தாஸ், 5.13 லட்சம் ரூபாயை திருமலையிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய திருமலை, வேலை வாங்கித்தராமல் அலைக்கழித்து வந்தார்.
அதுபோல, மேலும் இருவர் மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, மூன்று பேரிடமும் சேர்த்து வாங்கிய, 8.88 லட்சம் ரூபாயை திருப்பி தராமல் மோசடி செய்தார். மோசடியில் ஈடுபட்ட திருமலையை கைது செய்தனர்.

