/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் 'சஸ்பெண்ட்' சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு நோட்டீஸ்
/
ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் 'சஸ்பெண்ட்' சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு நோட்டீஸ்
ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் 'சஸ்பெண்ட்' சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு நோட்டீஸ்
ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் 'சஸ்பெண்ட்' சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு நோட்டீஸ்
ADDED : ஜன 07, 2025 01:15 AM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சி பில் கலெக்டர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் பில்கலெக்டராக பணியாற்றி வந்தவர் சின்ன ஜெயக்குமார். துாய்மை பணியாளரான இவரது தந்தை மாதையன், பணி காலத்தில் உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் இருவருக்கு, பில் கலெக்டர் பணி வழங்கப்பட்டது.
இவர் பணிக்கு சேர்ந்து நன்னடத்தை காலத்திலேயே, சொத்து வரி பணத்தை கையாடல் செய்ததாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதன் பின், ஓசூர் மாநகராட்சியில் மீண்டும் பில் கலெக்டரான அவர், பல்வேறு புகார்களுக்கு ஆளானதால், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரத்துறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சொத்து வரி விதிக்க ஒருவரிடம், சின்ன ஜெயக்குமார் லஞ்சம் கேட்பதும், கமிஷனருக்கு பணம் கொடுக்க வேண்டும் என, அவர் பேசுவதும் போன்ற ஆடியோ, கமிஷனர் ஸ்ரீகாந்திற்கு கிடைத்தது. அதை ஆதாரமாக வைத்து, சின்ன ஜெயக்குமாரை நேற்று கமிஷனர் ஸ்ரீகாந்த், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
அதேபோல், சொத்து வரி விதிப்பில், சரியாக செயல்படாததால், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பணியை சரியாக செய்ய தவறியதால், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுரேஷிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர் பணியில் சேர்ந்தது முதல், இன்று வரை கடந்த, 35 ஆண்டுக்கு மேலாக, ஓசூர் மாநகராட்சியிலேயே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.