/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேலம் - அரக்கோணம் மெமு ரயில் மீண்டும்நாளை முதல் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி

ADDED : ஏப் 03, 2025 01:58 AM
சேலம் - அரக்கோணம் மெமு ரயில் மீண்டும்நாளை முதல் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி:--சேலம் ரயில்வே கோட்டம், சேலத்தில் இருந்து அரக்கோணம் வரை சென்று, மீண்டும் அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை வந்து செல்லும், மெமு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஜன., 19 முதல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில், ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நாளை, 4ம் தேதி முதல், சேலம் - அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். இந்த மெமு எக்ஸ்பிரஸ் ரயில் (16087)அரக்கோணம் சந்திப்பில் காலை, 5:05 மணிக்கு புறப்பட்டு, சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்த் ராயபுரம், காட்பாடி சந்திப்பு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்துார், சாமல்பட்டி, தாசம்பட்டி தொட்டம்பட்டி, மொரப்பூர், புட்டிரெட்டிப்பட்டி, பொம்மிடி, தின்னப்பட்டி, கருப்பூர், 10:50 மணிக்கு சேலம் சந்திப்பை வந்தடையும். பின் (16088) மதியம், 3:30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு, 8:45 மணிக்கு அரக்கோணம்
சந்திப்பை சென்றடையும். இந்த எக்ஸ்பிரஸ் ரயில், 19 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், மொரப்பூர், பொம்மிடி பகுதி ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.