/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுகுவாரிகள் மீது வரி விதிக்கும் தி.மு.க., அரசு'
/
'தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுகுவாரிகள் மீது வரி விதிக்கும் தி.மு.க., அரசு'
'தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுகுவாரிகள் மீது வரி விதிக்கும் தி.மு.க., அரசு'
'தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுகுவாரிகள் மீது வரி விதிக்கும் தி.மு.க., அரசு'
ADDED : ஏப் 16, 2025 01:17 AM
'தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுகுவாரிகள் மீது வரி விதிக்கும் தி.மு.க., அரசு'
தர்மபுரி:'தர்மபுரி மாவட்டத்தில், கனிமங்களை எடுத்துச்செல்ல விதித்துள்ள சீனியரேஜ் வரி மற்றும் நிலவரி, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, தி.மு.க., அரசு விதித்துள்ளது' என, குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
தெரிவித்துள்ளனர்.வரி விதிப்பு குறித்து, தர்மபுரி மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அலாவுதீன் பாட்ஷா, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் செந்தில் சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளிக்க, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர்.
அப்போது, குவாரி உரிமையாளரும் முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:
கனிமங்களை எடுத்துச்செல்ல விதிக்கப்பட்டுள்ள சீனியரேஜ் வரி மற்றும் கனிமங்கள் உள்ள நிலங்களின் மீதான வரி அதிகப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு கன மீட்டர் சாதாரண கற்களுக்கு, 90 ரூபாய் என்றும் டன்னாக எடுத்துச் செல்லும்போது, ஒரு டன்னுக்கு, 60 ரூபாய் வீதம் வரை செலுத்தி, கடந்த மாதம் வரை நடைசீட்டு பெறப்பட்டது. தற்போது, கற்களை கன மீட்டரில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக, டன் அளவில் எடுத்துச் செல்ல நடைமுறை படுத்தப்பட்டு, இணையதள வழியாக நடைச்சீட்டு வழங்கப்படுகிறது. இதில், கன மீட்டரில் இருந்து, டன்னாக மாறும்போது, ஒரு கனமீட்டர் சாதாரண கற்கள், 2.75 டன் என்ற அளவில் சீனியரேஜ் வரி விதிக்கப்படுகிறது. அவர் மாற்றம் செய்யும்போது, ஒரு கன மீட்டர் சாதாரண கல்லுக்கு, 165 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. இது, ஏற்கனவே செலுத்தி வந்த சீனியரேஜ் வரியை விட, 75 ரூபாய் கூடுதல்.
சாதாரண கற்களுக்கு டன்னுக்கு, 90 ரூபாய் கனிமங்கள் அமைந்துள்ள நிலத்துக்கு குத்தகைதாரர் வரியாக செலுத்த வேண்டும் என்ற வரி விதிப்பின் மூலம், சீனியரேஜ் வரியை விட, 75 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலையில், வரியையும் சேர்க்கும் போது, ஒரு டன்னுக்கு, 165 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. அதன்படி ஒரு யூனிட் கனிமத்திற்கு, 495 ரூபாய், 3 யூனிட் கொண்ட லாரியில் அனுப்பும் போது, தற்போது செலுத்தி வரும் வரியை விட, 1,485 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது.
இதனால், குவாரி தொழில் பாதிப்பதோடு, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தால், பொதுமக்கள் அரசு ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவர். இதை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, இது போன்ற வரி விதிப்பை, தி.மு.க., அரசு, குவாரி உரிமையாளர்கள் மீது விதித்துள்ளது. இதனால் குவாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் பேரத்திற்கு ஒத்துழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

