/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மலக்கசடு திட்டத்தை இடமாற்றம் செய்ய பஞ்., அலுவலகத்தில் மக்கள் தர்ணா
/
மலக்கசடு திட்டத்தை இடமாற்றம் செய்ய பஞ்., அலுவலகத்தில் மக்கள் தர்ணா
மலக்கசடு திட்டத்தை இடமாற்றம் செய்ய பஞ்., அலுவலகத்தில் மக்கள் தர்ணா
மலக்கசடு திட்டத்தை இடமாற்றம் செய்ய பஞ்., அலுவலகத்தில் மக்கள் தர்ணா
ADDED : ஜன 10, 2025 01:15 AM
மலக்கசடு திட்டத்தை இடமாற்றம் செய்ய பஞ்., அலுவலகத்தில் மக்கள் தர்ணா
நல்லம்பள்ளி, :தர்மபுரி மாவட்டம், எர்ரபையனஹள்ளி பஞ்., தாசன்கொட்டாய் பழந்தோட்டம் பகுதியில், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அரசு டெண்டர் விடப்பட்டதாக தகவல் வெளியானது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்தினால், இப்பகுதியை சுற்றியுள்ள கருப்பையனஹள்ளி, ஜெம்பேரிகொட்டாய், பாலிக்காடு, முத்தப்பா நகர், முருகன் நகர், நெக்குந்தி ஆகிய கிராமங்களில் வசிக்கும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் மாசு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தால், பல நுாறு ஏக்கர் பாசன விவசாய விளை நிலங்கள் பாதித்து, விவசாய தொழில் முடங்கும் நிலை உள்ளது. எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை வேறிடத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், நல்லம்பள்ளி பஞ்., அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களிடம், நல்லம்பள்ளி பி.டி.ஓ., இளங்குமரன் உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, உங்களது கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து, தர்ணா போராட்டத்தை, கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.