/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீரில் சாக்கடை கழிவு நீர்: நடவடிக்கை கோரி மக்கள் மனு
/
குடிநீரில் சாக்கடை கழிவு நீர்: நடவடிக்கை கோரி மக்கள் மனு
குடிநீரில் சாக்கடை கழிவு நீர்: நடவடிக்கை கோரி மக்கள் மனு
குடிநீரில் சாக்கடை கழிவு நீர்: நடவடிக்கை கோரி மக்கள் மனு
ADDED : பிப் 18, 2025 12:47 AM
குடிநீரில் சாக்கடை கழிவு நீர்: நடவடிக்கை கோரி மக்கள் மனு
சேலம்:பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, சாக்கடை கலந்த குடிநீரை வினியோகம் செய்வதை, புகைப்பட ஆதாரத்தை காட்டி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.இது குறித்து, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் வெங்கடாஜலம் கூறியதாவது: வாழப்பாடி நீர்முள்ளி குட்டை ஊராட்சி, 1 வது வார்டு, ராஜபட்டினம், மாரியம்மன் கோவில் பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், சாக்கடை கலந்து வருவதால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் வியாதி, அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, நீர்முள்ளி குட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, தொடர்ந்து சாக்கடை கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இது குறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, ஊராட்சி செயலாளர், டேங்க் ஆப்ரேட்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.